Take a fresh look at your lifestyle.

முதல்வர் ஸ்டாலினை வீட்டில் சந்தித்த மம்தா பானர்ஜி

63

தமிழக முதல்வர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

மணிப்பூர் கவர்னரும், மேற்கு வங்காள பொறுப்பு கவர்னருமான இல.கணேசன் இல்ல விழா, இன்று சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று சென்னை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு மாலை 5.37 மணிக்கு சென்றார். அவரை வீட்டு வாசலுக்கே வந்து ஸ்டாலின் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் மம்தா பானர்ஜிக்கு, ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காபி அருந்தியபடி உரையாடினர். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த சந்திப்பு மாலை 6.05 மணி வரை சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் இருந்து வெளியேறும்போது மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மம்தா பானர்ஜி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.