Take a fresh look at your lifestyle.

முதல்வர் உத்தரவுப்படி 2,604 பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன: டிஜிபி அலுவலகம் அறிவிப்பு

40

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி 2,604 பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் கூறியுள்ளதாவது, ‘‘கடந்த மே மாதம் 10ம் தேதியன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் ‘அனைத்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் வாரத்திற்கு ஒரு முறை பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும். அச்சமயம், காவல் கண்காணிப் பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்ப துடன் அவர்களின் மனுக்களையும் பெற்றுக் கொள்வார்கள். அப்போது முந்தைய மனுக் களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள 9 காவல் ஆணையரகங்களிலும், 37 காவல் மாவட்டங்களிலும் மாதந்தோறும் வாரத்திற்கு ஒரு முறை புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் திருநெல்வேலி காவல் ஆணை யரகங்களில் காவல் ஆணையர்களும், அனைத்து மாவட்டங்களில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களும் மொத்தம் 2,604 பொது மக்களிடமும், காவலர்களிடமும் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். டிஜிபி சைலேந்திரபாபு நேற்று டிஜிபி அலுவலகத்தில் 52 பொது மக்களிடமும், காவலர்களிடமும் குறைகளை கேட்டறிந்து மனுக் களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.