Take a fresh look at your lifestyle.

முதல்வரின் காரில் தொங்கியபடி சென்ற மேயர் ப்ரியா, கமிஷனர் ககன்தீப்சிங்

41

தமிழக முதல்வர் ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து சென்னை நகரில் நேற்று ஆய்வு செய்தார். தென்சென்னையில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம்,

பனையூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து, சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில், அங்கு செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.