Take a fresh look at your lifestyle.

மீண்டும் தர்ம யுத்தம்: ஓ.பி.எஸ். ஆவேசம் சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கு போய்விட்டார் என எடப்பாடி மீது குற்றச்சாட்டு

95

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சட்ட விதிகளை சிதைத்து விட்டார், சர்வாதிகாரத்தின் உச்ச கட்டத்துக்கு சென்று விட்டார், மீண்டும் தர்மயுத்தம் துவங்கியுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் ஆவேசமாக பேசினார்.

எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வம் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர்களை அறிவித்தனர். இரட்டை இலை சின்னம் கோரி பழனிசாமி உச்ச நீதிமன்ற த்தை நாடினார். அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென் னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப் பட்டது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆனால் வேட்பு மனு பரிசீலனையின் போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. என வே இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எனினும், அவரது தரப்பில் வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர் கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 87 மாவட்ட செயலா ளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கே ற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. வருகைப் பதிவேட் டில் கையெழுத்தி ட்டபிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை.

அப்போது ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- ‘‘அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதி களை எம்.ஜி.ஆர். வகுத்தார். அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்க ளுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது; தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன. எம்ஜி.ஆர்., ஜெய லலிதா கட்டிக்காத அதிமுகவின் சட்ட விதிகளை காப்பாற்ற தற்போது தர்ம யுத்தம் நடக்கிறது.

எந்த அளவுக்கு அண்ணா திமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். நீதி மன்ற ங்களின் தீர்ப்புக்கு மேலாக, மக்களின் தீர்ப்பு என ஒன்று இருக்கிறது, கூடிய சீக்கிரம் அது வரும். நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறோம். எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்; முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணை களை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம். தேர்தல் முடிவு வெளியாகும் போது அனைத்தும் தெரியவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.