மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு: பேஸ்புக்கில் நெகிழ வைத்த டிஜிபி சைலேந்திரபாபு
dgp sylendra babu helped public
சென்னை, ஜுன். 19–
சென்னை ஜெஜெ நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்து அவர் பிழைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபுவின் பேஸ்புக் பதிவு பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு காவல்பணி தவிர வாரந்தோறும் நீண்ட தூரம் சைக்கிளிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி அவர் செல்லும் போது காவல் பணிகளையும் மேற்கொள்கிறார். செல்லும் வழியில் உள்ள காவல் நிலையங்களை விசிட் அடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார். இது காவல்துறையினர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி எப்போது வேண்டுமானாலும் நமது
காவல் நிலையத்துக்கு விசிட் வருவார் என்று வழக்கு விவரங்கள் தொடர்பான ஆவணங்களை நிலுவையில் வைக்காமல் விழிப்புடன் அவர்களை இருக்கச் செய்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு டிஜிபி சைலேந்திரபாபுவின் இரக்கப்பார்வையில் சென்னை ஜெஜெ நகரில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் சென்னை ஜெஜெ நகரைச் சேர்ந்த சேட் என்ற மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை ஒன்றை காவல்துறை உதவியால் அமைத்துக் கொடுத்துள்ளது குறித்து சைலேந்திரபாபு குறிப்பிட்டுள்ளார். அந்த வழியாக சைக்கிளிங் செல்லும் போது டிஜிபி சைலேந்திரபாபுவின் கவனம் மாற்றுத்திறனாளி சேட் மீது பதிந்துள்ளது. அவர் குடும்பம்
நடத்த வழியின்றி கஷ்டப்படும் விஷயத்தை கேள்விப்பட்டு அவருக்கு பெட்டிக்கடை வைக்க உதவும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜெஜெ நகர் போலீசார் மாற்றுத்திறனாளி சேட்டுக்கு அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்து வைத்துக் கொடுத்து உதவியுள்ளனர். அது தொடர்பாக சேட், ‘‘பிழைக்க வழியில்லாமல் இருந்த எனக்கு சொந்தத் தொழிலை டிஜிபி சைலேந்திரபாபு சார் அமைத்துக் கொடுத்துள்ளார். என் பிள்ளைகள் ஜெஜெ நகரில் உள்ள அரசுப் பள்ளியி படிக்கின்றனர்’’ என தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அங்கிருந்து தனது சைக்கிளிங் டீமுடன் புறப்படும் சைலேந்திரபாபு மாற்றுத்திறனாளிக்கு சேட்டுக்கு வாழ்த்து சொல்லி விட்டு ஊக்கப்படுத்திவிட்டு சென்றார்.
டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த மனிதநேய செயல்பாடு தெொடர்பான பதிவு பேஸ்புக்கில் மற்ற வியூவர்ஸ்சுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,