Take a fresh look at your lifestyle.

மாநில குற்ற ஆவணக்காப்பக இன்ஸ்பெக்டரின் முயற்சி: மனநலம் பாதிப்படைந்த பெண் 4 ஆண்டுகளுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

197

மாநில குற்ற ஆவணக்காப்பக இன்ஸ்பெக்டரின் முயற்சியால் அனாதை இல்லத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிப்படைந்த கர்நாடகப் பெண் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அக்காவுடன் இணைந்த மகிழ்ச்சியில் ருக்கையா (இடமிருந்து வலம் முதல் நபர்)

தமிழகத்தில் அனாதைகளாக மற்றும் காணாமல் போய், மனநலம் பாதிப்படைந்து குடும்பத்தை பிரிந்து தவிப்பவர்களை கண்டறிந்து விசாரணை நடத்தி அவர்களை உற வினர்களிடம் இணைக்கும் பணியை மாநில குற்ற ஆவணக்காப்பக போலீசார் செய்து வருகின்றனர். மாநில குற்ற ஆவணக்காப்பக ஏடிஜிபி வினித்தேவ் வாங்கடே உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தாஹிரா தலைமையில் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள காப்பகங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பாக உள்ள அனாதை இல்ல ங்கள் போன்றவற்றில் இன்ஸ்பெக்டர் தாஹிரா வாரம் தோறும் சென்று மாநில குற்ற ஆவணக்காப்பக போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் தாஹிரா

சென்னை செங்கல்பட்டில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் என்ற தனியார் காப்பகத்தில் ருக்கை யா பானு என்ற 35 வயது மனநலம் பாதிப்படைந்த பெண் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி யிருந்துள்ளார். அவரிடம் இன்ஸ்பெக்டர் தாஹிரா விசாரணை நடத்தி அவரது உறவின ர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். இதில் அந்தப் பெண் கர்நாடகா மாநிலம் தேவாங் கரே மாவட்டம் அகமது நகராவில் வசிக்கும் உசேன் என்பவரின் மனைவி என்பதும் மனநலம் பாதிப்படைந்து தனியார் இல்லத்தில் வந்து சேர்ந்தது தெரியவந்தது. அது தொடர் பாக கர்நாடக மாநில போலீசாருக்கு ருக்கையாவின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் மாநில குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் அனுப்பப்பட்டது. ஓராண்டு கால தேடுதலுக்குப் பிறகு ருக்கையாவின் குடும்பத்தைச் சேர்ந்த பரிதா என்பவர் தேவாங்கரே மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் தாஹிரா ருக்கையா குறித்த விவரங்களை தெரிவித்தார். அதனையடுத்து பரிதா சென் னைக்கு வந்து ருக்கையாவை அழைத்துச் சென்றார். தனது சகோதரியை மீட்டுக் கொடுத்த இன்ஸ்பெக்டர் தாஹிராவுக்கு பரிதா குடும்பத்தினர் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.