மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 25 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி யுள்ளன. சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.