Take a fresh look at your lifestyle.

மாண்டஸ் புயல்: சென்னை நகரில் 12 பேரிடர் மீட்பு குழுக்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு

97

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், மாண்டஸ் புயலையொட்டி அதி தீவிர படையினர், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட காவல் குழுவினர் அனை த்து காவல் மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மாண்டஸ் என்ற புயல் உருவாகி இன்று (09.12.2022) கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர வேகத்தில் காற்று வீசும் எனவும், கன மழை அல் லது மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இப் புயல் காற்றின் வேகத்தில், வீட்டின் மேற்கூரைகள், குடிசைப்பகுதிகளில் உள்ள மேற்கூரைகள், தகடுகள், விளம்பர பேனர்கள் பறக்கக் கூடும் எனவும், மின்சார பெட்டிகள், ஒயர்கள் தொலை தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடையக்கூடும் எனவும், மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உடைந்து விழக்கூடும் எனவும், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மாண்டஸ் புயல் காரணமாக, தமிழக அரசு உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, கலந்தாய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் மாண்டஸ் புயல் பாதிப்புகளின்போது, பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப் பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்வதற்காக, சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் (District Disaster Response Force) அமைக்கப் பட்டு ள்ளது. ஒவ்வொரு குழுவிலும், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவினரிடம் தயார் நிலை யில் உள்ளன.

மேலும், படகுகளில் சென்று மீட்பு பணிகள் மேற்கொள்ள 5 காவலர்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 40 நபர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் (Tamilnadu State Disaster Response Force) குழுவினர் தகுந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.