சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாண்டஸ் புயலுக்கு 6 பேர் மின்சாரம் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலியாகி உள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 1வது தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர்கள் லட்சுமி (45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (25). இவர்கள் நேற்று இரவு புயலின் போது, பாதுகாப்புக்காக மற்றொரு வீட்டு வாகன நிறுத்துமிடத்துக்கு சென்ற போது அங்கு மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன்குமார் (22), சுகன்குமார் (24) ஆகி யோர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைபாக்கத்தில் தங்கி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். புயலால் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர். அதே போல துரைப் பாக்கத்தில் ஐ.டி. நிறுவனத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த விஜயகுமார் காற்றில் ஆடிக்கொண்டிருந்த 10 அடி உயர ஜன்னலை அடைப்பதற்காக சென்றார். அப்போது ஜன்னல் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் குத்தி உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.