Take a fresh look at your lifestyle.

மாண்டஸ் புயலில் சிறந்த காவல் பணி: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உள்ளிட்ட 24 போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

86

சென்னை நகரில் மாண்டஸ் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை சமயத்தில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உள்ளிட்ட 24 போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு கடிதம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சிறந்த காவல் பணிபுரியும் காவல் அதிகா ரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாரா ட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். இதன் தொடர்சியாக 2022ம் ஆண்டு மாண்டஸ் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், கூடுதல் ஆணையாளர்கள் முதல் காவலர் கள் வரையிலான காவல் அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர்.

குறிப்பாக 09.12.2022 அன்று மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்ற வானிலை அறிவிப் பின் போது பொது மக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்வ தற் காகவும், சென்னை பெருநகர காவல் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளிநர்கள் என 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் காவல்துறை சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் (District Disaster Response Force) அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணி களில் அனுபவம் உள்ள 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டு, மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவின ரிடம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும், படகுகளில் சென்று மீட்பு பணிகள் மேற்கொள்ள 5 காவலர்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் மேலும் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, எவ்வித அசம்பாவிதமும் நிகழா மல் தடுக்கப்பட்டதுன், புயலின் காரணமாக சாலையில், விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து உடனுக்குடன் சீர் செய்யப்பட்டது. அதனையடுத்து மாண்டஸ் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் சிறப்பாக பணிபுரிந்த, சென்னை நகர கூடுதல் கமிஷ னர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு, இணைக்கமிஷனர் ரம்யாபாரதி, மற்றும் துணைக் கமிஷனர்கள் மகேந்திரன் (அடையாறு), ராஜாராம் (கொளத்தூர்), சவுளந்திரராஜன் (ஆயுதப் படை), காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத் தம் 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு கடிதங்கள் வழங்கினார்.