மாணவர்கள் ஒரு போதும் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
பொது மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக உரையாடும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் பரீட்சை வீரர்கள் நிகழ்ச்சி, கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதட்டம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, பிரதமர் மோடி அவர்களுடன் பகிர்ந்து கொள்வார். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் இன்று நடந்தது.இதில் நாடு முழுவதிலும் இருந்து 36 லட்சம் மாணவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி பேசுகையில், தேர்வு குறித்து ஆலோசனை வழங்கும்படி நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஆண்டுதோறும் எனக்கு கடிதம் எழுதுகின்றனர். நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் எழுதும் கடிதம் உத்வேகத்தை அளிக்கிறது.
உங்கள் தாயின் நேர மேலாண்மை திறனை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு தாய் தான் செய்யும் மகத்தான பணியால், ஒரு போதும் சுமையாக இருப்பது இல்லை. உங்கள் தாயாரை நீங்கள் கவனித்தால், உங்கள் நேரத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது என்பது உங்களுக்கு புரியும். குடும்பத்தினருக்கு உங்கள் மீது எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையானது. குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என பெற்றோர்களை கேட்டு கொள்கிறேன். அதேநேரத்தில், மாணவர்கள் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. தங்களது இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.
சில மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை, தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். தேர்வில் ஏமாற்றுவது ஓரிரு தேர்வுகளில் வேண்டுமானால் பலனளிக்கலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் அது பயன்படாது. அதனால், அந்த பாதையை தேர்வு செய்யக்கூடாது. அந்த மாணவர்கள் தங்களின் நேரத்தையும், ஆற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால், அவர்கள் வெற்றியின் உச்சத்தை அடைவார்கள். வாழ்க்கையில் குறுக்கு வழிகளை நாம் ஒரு போதும் தேர்வு செய்யக்கூடாது.
தேர்வு நேரத்தில் கடின உழைப்பை கொடுக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் முயற்சி எப்போதும் வீணாக போகாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். கடினமாக உழைக்கும் மாணவர்களுக்கு அது எப்போதும் வாழ்க்கையில் பயனளிக்கும் என்றார்.
தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்ப்பது என மதுரையை சேர்ந்த அஸ்வினி பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட்டாக்க பார்க்கிறார் என பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார். இந்தசூழ்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? எதிர்பார்க்கும் நிலையில். முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை களமிறக்க பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.