Take a fresh look at your lifestyle.

மல்யுத்த பயிற்சியாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க தனிக்குழு

107

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சி யாளர்கள் மீது மல்யுத்த வீரர், -வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இரு ந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில் வித்தை வீராங் கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.