Take a fresh look at your lifestyle.

மனைவியிடம் பேசியவரை வெட்டிக் கொல்ல முயன்ற நபர் கைது

attempt murder in cgetpat one arrest

76

சென்னை, சேத்துப்பட்டு அருகே தனது  மனைவியிடம் அடிக்கடி பேசிய நபரை இருசக்கர வாகனத்தில் சென்ற பேோது வழிமறித்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சேத்துப்பட்டு, எம்.எஸ்.நகர் 1வது தெருவில் வசித்து வருபவர் ஜெகதீசன் (40). அந்தப் பகுதியில் ஜுஸ் கடை நடத்தி வருகிறார். பழங்கள் வாங்குவதற்காக நேற்று (20.05.2022) காலை அவரது இருசக்கர வாகனத்தில் சேத்துப்பட்டு பம்பிங் ஸ்டேஷன் ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் ஜெகதீசனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, தகராறு செய்து, கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். ரத்தக்காயமடைந்த ஜெகதீசனை அருகிலிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீசன் கொடுத்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புகார்தாரரிடம் மற்றும் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை முயற்சியில் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்துப்பட்டைச் சேர்ந்த செபாஸ்டின் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகதீசன் அடிக்கடி செபாஸ்டினின் மனைவியிடம் பேசி வந்ததால், ஆத்திரமடைந்த் செபாஸ்டின் ஜெகதீசனை கத்தியால் தாக்கியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி செபாஸ்டின் விசாரணைக்குப் பின்னர், நேற்று (20.05.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.