ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் 50 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.
அண்ணா தி.மு.க. புரட்சித் தலைவி பேரவையின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 23.2.2023 அன்று, மதுரை மாவட்டம், டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. மகள் உள்ளிட்ட 51 ஏழை, எளிய மணமக்களுக்கு இலவச திருமணம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி அண்ணா தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. தலைமையில், கழக புரட்சித் தலைவி பேரவை நிர்வாகிகள் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இந்நிகழ்வின்போது, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ் நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர். இளங்கோவன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் பிஆர். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை என். கணேசராஜா, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பி. பெரியபுள்ளான் (எ) செல்வம் எம்.எல்.ஏ., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்களான கே.ஏ.கே. முகில்,என்.சதன் பிரபாகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் கே. தமிழரசன், மதுரை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.எஸ். சரவணன் உள்ளிட்ட கழக புரட்சித் தலைவி பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.