Take a fresh look at your lifestyle.

மகனை தாக்கிய தாயை கட்டையால் அடித்த இருவர் கைது

96

திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகனை தாக்கிய நண்பர்களை தடுக்கச் சென்ற தாயையும் கட்டையால் தாக்கிய 2 நபர்கள் கைது பேோலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி, ஈஸ்வரதாஸ் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (22). இவர் தனது நண்பர்கள் கவின்குமார், பிரேம்குமார் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் கடந்த 26.01.2023 அன்று வீட்டினருகே, திருவல்லிக்கேணி, பழனியம்மன் கோயில் 1வது தெரு, கெனால் தெருவில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது நண்பர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதில், கவின்குமார், பிரேம்குமார் மற்றும் அரவிந்த் ஆகியோர் தினேஷ் குமாரை கை மற்றும் கட்டையால் தாக்கினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த தினேஷ்குமாரின் தாயாரையும் மேற்படி 3 நபர்கள் கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த தினேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து அண்ணா சதுக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கவின்குமார் (எ) மின்னல், பிரேம்குமார் (எ) பிலிப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் எதிரி கவின்குமார் (எ) மின்னல் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 1 கொலை முயற்சி வழக்கு மற்றும் 2 அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (27.01.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள அரவிந்த் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.