Take a fresh look at your lifestyle.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு கூட்டம்

82

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் சார்பில் ‘தேசிய வாக்காளர் தினம்’ சார்பாக உறுதிமொழி ஏற்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்கா ளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான். நாட்டின் வாக் காளர் களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்கு விப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி சென்னைப் பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கு பெற்ற உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது.

சென்னைப் பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, தலைமையிட இணைக்கமிஷனர் சாமுண்டிஸ்வரி, மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர்கள் மீனா, ஸ்டாலின் மற்றும் தலைமையிட துணைக்கமிஷனர் ராதாகிருஷ்ணன், நிர்வாகப் பிரிவு துணைக்கமிஷனர் ராமமூர்த்தி, நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர்கள் அரவிந்த், சக்திவேல் மற்றும் காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் ‘தேசிய வாக்காளர் தினம்’ உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.