Take a fresh look at your lifestyle.

போலி ஆவணம் தயாரித்து வீட்டுக்கடன் மோசடி: தாய், மகன் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்

111

போலியான ஆவணங்களை கொடுத்து வங்கியில் ரூ.10.80 லட்சம் வீட்டுக்கடன் பெற்ற மோசடி செய்த தாய் மற்றும் மகன் உட்பட 3 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, மைலாப்பூர், சிண்டிகேட் வங்கி கிளையின் மேலாளர் சந்திரசேகரன் கடந்த 2008ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி. அவரது மகன் ஹரிஹரன் மற்றும் அண்ணாநகரைச் சேர்ந்த முத்து வெள்ளையன் ஆகியோர் 2003ம் ஆண்டு போலியான ஆவணங்களை வங்கியில் சமர்பித்து ரூ.10. 80 லட்சம் வீட்டு கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டு எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர், பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் தொடர்ச்சியாக நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கப்பட்டும் வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை நேற்று (10.10.2022) முடிவுக்கு வந்து வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிரிகள் விசாலாட்சி, ஹரிஹரன், முத்து வெள்ளையன் ஆகிய மூவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், விசாலாட்சி அவரது மகன் ஹரிஹரன் ஆகிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. முத்து வெள்ளையனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து கனம் நீதிபதி தீர்ப்பளித்தார்,
இவ்வழக்கில் துரிதமாக புலன்விசாரணை மேற்கொண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத் தந்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்,