உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்ட நிலையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத் துள்ளது. ஆனாலும் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷ்யா மும்முனை தாக்குதல் நடத்தி யது. மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த நிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடு வதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரஷ்ய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. இது தொடர் பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது, உக் ரைனில் ரஷ்யா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.