Take a fresh look at your lifestyle.

போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேச்சு

70

போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசினார்.

சென்னை, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று முன்தினம் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் செயின்ட் ஜோசப் கல்விக் குழுமங்களின் தலைவர் பாபு மனோகரன் தலைமை தாங்கினார். மருத்துவர் அபிலாஷா வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
‘‘போதை இல்லாத சமுதாயமாக இந்நாடு மாற வேண்டும் எனில் மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். போதைப் பொருள் விற்பதைக் கண்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்’’. என கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ‘போதை எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு சிறப்பித்தார்.