சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை நேரில் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் புகார் மனு பெற்று அதற்கு தீர்வு காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் கமிஷனர் சங்கர்ஜிவால் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் புகார் மனுக்களை நேரில் பெற்றார். புகார் மனு தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொண்ட அவர் அந்தந்த அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் உடனிருந்தார்.