சென்னை, காவலர் உயர் பயிற்சியகத்தில் பொதுமக்களிடம் அன்பான அணுகுமுறை என்ற பயிற்சித் திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு இன்று துவங்கி வைத்தார்.
காவலர்கள், பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதற்கு ஏதுவாகவும், காவலர் பொதுமக்கள் இடையிலான தொடர்பினை மேம்படுத்தவும் 1.20 லட்சம் காவலர்களுக்கு, பொதுமக்களுடனான தொடர்பை பேணுவதற்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 30.11.2021 அன்று அரசா ணை பிறப்பிக்கப்பட்டு “அன்பான அணுகுமுறை” என்ற தலைப்பில் பயிற்சி வழங்க ரூ. 10 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் முன் னோட்ட பயிற்சி தொடக்க விழா, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின் பேரில் இன்று 09.02.2023 அண்ணா நிர்வாக பயிற்சி கல்லூரியில் டிஜிபி சைலேந்திரபாபு தலை மையில், தமிழக மனிதவளத்துறை செயலாளர் மைதிலி கே ராஜேந்திரன் முன்னி லையில் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் காவலர் நலன் டிஜிபி கருணா சாகர், தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியக கூடுதல் தலைமை இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், பயிற்றுநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.