Take a fresh look at your lifestyle.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

anti terrorisom day in chennai police commissioer office

128

சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு  உயர் போலீஸ் அதிகாரிகள் காவலர் அது தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இன்று (20.05.2022) காலை 11 மணியளவில் சென்னை, வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. சென்னை நகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் லோகநாதன் (தலைமையிடம்), தேன்மொழி (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) சாமுண்டீஸ்வரி, காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் அரவிந்த், மீனா (மத்தியக் குற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.