Take a fresh look at your lifestyle.

பெண் காவலர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு மகளிர் தின நினைவுப்பரிசு: * கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்

128

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் காவலர்கள், பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மகளிர்தின நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மகளிர் தினத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட 25 காவல் நிலையங்களும் பெண் உயர் அதிகாரிகள் தலைமையில் இயங்கும் என கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக தலைமையிட கூடுதல் கமிஷனரான விஜயகுமாரி சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் பணிகளை கூடுதலாக கவனிப்பார் என கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். மேலும் ஆவடி மற்றும் ரெட்ஹில்ஸ் துணைக்கமிஷனராக நிர்வாகப்பிரிவு, தலைமையிட துணைக்கமிஷனர் உமையாளர் கூடுதல் பொறுப்பில் இருப்பார்கள் என தெரிவித்தார். அதனையடுத்து இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பெண் காவலர்கள் மற்றும் மகளிர் ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, துணை ஆணையர் உமையாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.