Take a fresh look at your lifestyle.

பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் நடத்திய பேரணி: * தாம்பரம் கமிஷனர் ரவி தொடங்கி வைத்தார்

137

பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி தொடங்கி வைத்தார்.

பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் ( IMA) சார்பில் பெண்களூக்கு எதிராக தொடுக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி சென்னை தாம்பரத்தில் நடந்தது. இன்று அதிகாலை 6.-30 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி 7.-30 மணி வரை நடைபெற்றது. தாம்பரம் ஜிஎஸ்டி ரோடு, இந்து மிஷன் மருத்துவமணை முதல், மெப்ஸ் சிக்னல் வரை டாக்டர் கீர்த்திகா தேவி தலைமையில் நடந்த இந்த பேரணியை தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.