Take a fresh look at your lifestyle.

பெண்கள், குழந்தைகள் குற்றங்களுக்கு எதிரான மாநில மாநாடு: டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்பு

82

பெண்கள், குழந்தைகள் குற்றங்களுக்கெதிரான மாநில மாநாடு சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடந்தது. இதில் காவல் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சார்பாக சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில் ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான மாநாடு நேற்று நடந்தது. இதில் அரசு வழக்குரைஞர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் பணிபுரியும் கூடுதல் காவல் துணை ஆணையர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய் வாளர்கள் என சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த விழாவில் கடத்தல் குற்றங்கள் தொடர்பாக எழுச்சி யூட்டும் உரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆள் கடத்தல் தொடர்பான சவால்கள், ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ள, சமூக, பொருளாதார, உளவியல், பாலியல் காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்ட விதிகள், கொத்தடிமை தொழிலாளர் முறைச் சட்டம் 1976 மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக எடுத்துரைக் கப்பட்டது.

இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி கல்பனாநாயக், எஸ்பிக்கள் ஜெயஸ்ரீ, கிங்ஸ்லின், வனிதா மற்றும் சர்வதேச நீதி இயக்கத்தின் அதிகாரிகள், சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தொழிலாளர் துறையைச் சார்ந்த அதிகாரிகள், பச்பேன் பச்சோ நிறுவன அதிகாரிகள் மற்றும் சட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.