பூக்கடையில் ரூ. 1 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: இருவர் கைது
1 lakh hawala cash seazed in flower bazaar
சென்னை, பூக்கடை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1,00,85,120- பணத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (31.08.2022) மாலை, பூக்கடை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலக சாலையில் வாகனத் தணிக்கையில் இருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் காவல் குழுவினரை பார்த்ததும், இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, காவல் குழுவினர் துரத்திச் சென்று இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருவரிடமும் விசாரணை செய்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு பணம் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், இருவரையும் பணம் மற்றும் இருசக்கர வாகனத்துடன் பூக்கடை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர்கள் மண்ணடியைச் சேர்ந்த அம்ஜத்கான் (26), செங்குன்றத்தைச் சேர்ந்த ஷேக் தாவுத் (52) என்பது தெரியவந்தது. இருவரும், பர்மா பஜாரில் வேலை செய்து வருவதும், இவர்கள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பணம் ரூ.1,00,85,120/- இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்ததின்பேரில், வருமான வரித்துறை, புலனாய்வு அதிகாரிகளிடம் பிடிபட்ட இருவரையும் பணம் ரூ.1,00,85,120- மற்றும் இருசக்கர வாகனத்துடன் நேற்று (31.08.2022) இரவு ஒப்படைக்கப்பட்டனர்.