Take a fresh look at your lifestyle.

புழல் சிறையில் இயற்கை மருத்துவ தாவரங்களின் நாற்றுப் பண்ணை: டிஜிபி அமரேஷ் புஜாரி திறந்து வைத்தார்

75

சென்னை புழல் சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணையை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி திறந்து வைத்தார்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப் பட்டார். அவர் பதவியேற்றதில் இருந்து தமிழக சிறைகளில் பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். சிறைகளில் வார்டன்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய கேமராக்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு ஆடியோ புத்தகம் திட்டம் செயல் படுத்தப் பட்டது. அதனையடுத்து நேற்று கைதிகளின் உடைகளை துவைப்பதற்கு கனரக சலவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்ததாக புழல் சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணையை டிஜிபி அமரேஷ் புஜாரி நேற்று திறந்து வைத்தார். அது தொடர்பாக அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளதாவது: ‘‘பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படுகிறது. ரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்த நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்பட மாட்டாது. செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது. மூலிகை கள் சந்தையில் விற்கப்பட்டு அதில் கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படவுள்ளது’’. இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜி முருகேசன், கண்கா ணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர்.