Take a fresh look at your lifestyle.

புறக்காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புக்கள்: ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார்

115

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 2 புறக்காவல் நிலையங்கள் மற்றும் புதுப் பிக்கப்பட்ட காவல் குடியிருப்பை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 புறக்காவல் நிலையங்களை கமிஷனர் சந்தீப் ராய் ரத் தோர் நேற்று திறந்து வைத்தார். ஒவ்வொரு காவல் புறக்காவல் நிலையத்திலும் இருந்து 2 காவல் உதவி ஆய்வாளர்கள் புறக்காவல் நிலைய அலுவலில் நியமிக்கப்படுவார்கள். 24 மணி நேரமும் செயல்படும் இந்த புறக்காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களுக்கு உடனடியாக ரசீது வழங்கி விசாரித்து உடனடியாக தீர்வு காணப் படும். மேலும் இங்கு வரவேற்பாளர், மற்றும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காட்டூர் காவல் நிலைய பகுதியில் உபயோகிக்காமல் இருந்த 17 காவலர் குடியிருப்புகள் புதுப்பிக்கப்பட்டு சாவிகளை காவலர்களிடம் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.