தமிழகம் முழுவதும் உள்ள புரொபசனல் கூரியர் நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புரபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப் படாத கூடுதல் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் புரபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
புரபஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஐதராபாத்திலும் இயங்கி வருகின்றன. இங்கு சோதனை நடத்து வதற்காக இன்று காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஒரே நேரத்தில் அதிரடியாக அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் சோதனை நடத் தினார் கள். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்க ளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.