Take a fresh look at your lifestyle.

புதுச்சேரியில் ரூ. 12 கோடி பழமை வாய்ந்த சாமி சிலைகள்‌ மீட்பு

112

தமிழக சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் வந்தது. அது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில் புதுச்சேரி பகுதியில்
உள்ள வீட்டில் தொன்மையான கோவில்‌ சிலைகள்‌
பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி
ஜெயந்த்‌ முரளி உத்தரவின்‌ பேரில்‌, ஐஜி தினகரன் மேற் பார்வையில்
ஏடிஎஸ்பி அசோக்‌ நடராஜன்‌ தலைமையில்‌
டிஎஸ்பிக்கள் மோகன்‌, முத்துராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் செல்வி.
வசந்தி, அம்மு அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள சப்ரெய்ன் தெருவில் தனிப்படையினர் நேற்று
அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஜேசாப்‌ கொலம்பானி என்பவரின்‌ வசம்‌ இருந்த தொன்மையான 3 சிலைகள்‌,
நடராஜர்‌, வீணாதாரா சிவன்‌ மற்றும்‌ விஷ்ணு உலோக சிலைகள்‌ இருந்தது தெரிய வந்தது.

அந்த சிலைகள் முறைப்படி பெறப்பட்டதற்கான ஆவணங்கள் அங்கு எதுவும் அங்கு இல்லை. அதனையடுத்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மேற்படி சிலைகள்‌ தமிழகத்தின்‌
கோவில்களில்‌ இருந்து 1980 க்கு முன்பாக களவாடப்பட்ட சிலைகளாக இருக்கக்கூடும்‌ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சிலைகள்‌ சுமார்‌ 600 வருடங்களுக்கு மேலாக தொன்மை வாய்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
சோழர்கள்‌ மற்றும்‌ விஜய நகரப்‌ பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக்‌ காலத்தைச்‌ சேர்ந்தவை
எனவும் கருதப்படுகிறது.
மேலும் இந்த சிலைகள்‌ ஜோசப்‌ கொலம்பானி வசம்‌ வந்தது எப்படி, யார் மூலம்‌
எப்பொழுது கிடைத்தது என்பது குறித்த ஆவணங்களும்‌ இல்லை. இச்சிலைகளை
பிரான்ஸ்‌ நாட்டிற்கு ஒருமுறை கடத்த முயற்சி நடந்திருந்ததும்‌ தெரிய வந்துள்ளது.
மேலும்‌ இந்த சிலைகள்‌ எந்த கோவிலை சேர்ந்தது என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி
வருகிறன்றனர்.
இந்த கைப்பற்றப்பட்ட சிலைகள்‌ தொன்மையானது என்று தொல்லியல்‌ சான்று
பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைக்கடத்தல்‌ தடுப்புப்‌ பிரிவு போலீசாரின் இந்த சிறப்பான செயல்பாட்டினை டிஜிபி
சைலேந்திர பாபு, வெகுவாக பாராட்டினார்.