புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ரியல் எஸ்டேட் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார். அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் கண்காட்சி 2023 துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.