பீஸ்ட் படத்தில் வரும் தீவிரவாதி போல இருக்கிறாய் என்று சுட்டிக்காட்டி முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந் தோப்பு நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் சையத் யூனுஸ் (வயது 26). ரமலான் மாதத்தை முன்னிட்டு இவர் நோன்பு வைத்திருந்தார். நேற்று மாலை இவர் நோன்பு திறப்பதற்காக அந்த பகுதியில் இருந்த பேக்கரிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த வினோத் என்ற வாலிபர் வினோத் என்பவர் யூனுசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பாக யூனுஸ் புளியந்தோப்பு போலீசில் அளித்த புகார் மனுவில்,
” நோன்பு திறப்பதற்காக புளியந்தோப்பு ஐரோட்டில் உள்ள தனியார் பேக்கரிக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த
வினோத் என்பவர், என் தோற்றத்தைப் பார்த்து, விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வரும் காட்சிகளை பேசி, நீ தீவிரவாதி போல் இருக்கிறாய்” என்று திட்டி என்னிடம் தகராறு செய்தார். மேலும் என் மீது கைகளால் தாக்குதல் நடத்தினார். தமிழகத்தில் மத ரீதியாக அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் சூழலில் மத ரீதியாக தாக்குதல் நடத்திய வாலிபர் வினோத் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”” . இவ்வாறு அந்த புகார் மனுவில் யூனுஸ் கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.