பிக்பாஸ் 6வது சீசன் வீடு கலகலப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. சாந்தியை அடுத்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து தொகுப்பாளினி மகேஷ்வரி வெளியேறினார். குறைந்த வாக்குகள் பெற்றார் என வெளியேறிவிட்டார்.
அவர் நிகழ்ச்சி யில் இருந்து வெளியேறியதும் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார். இப்போது பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரமன் கண்டி ப்பாக நூறு சதவீதம் இறுதி வரை வருவார். தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது என்றால் அது சரியான நிலைப்பாடு தான். விக்ரமன் கண்டிப்பாக உறுதியான பலமான போட்டியாளர் என கூறியுள்ளார்.