பிக்பாஸ்6 சீசன் ஷோ தற்போது விஜய் டிவியில் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் நடிகை ஆயிஷா ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஔிபரப்பான சத்யா சீரியல் மூலமாக மிகவும் பிரபலமானவர்ர். பிக் பாஸ் ஷோவில் மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் தங்களை பற்றிய கதையை சொன்ன நிலையில் ஆயிஷா மட்டும் அவரது அனுபவம் பற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் அவரை பற்றிய உண்மைகளை அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் பேட்டியில் கூறி அனைவர்க்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார். ‘‘ஆயிஷாவுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. முதல் திருமணம் நடந்து அது ரத்தாகி 18 வயதிலேயே 2ம் திருமணம் செய்துகொண்டார். அதுவும் செட் ஆகாததால் பிரிந்து விட்டார். அதன் பின் அவர் சென்னையில் படிக்கவந்த இடத்தில தான் என்னை சந்தித்து காதலிக்க தொடங்கினார். நான்தான் அவரை சீரியல்களில் அறிமுகம் செய்தேன். பின்னை என்னை பிரேக் செய்துவிட்டு தற்போது வேறொரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் அவர் இருக்கிறார் என தேவ் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.