சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தில், பாஸ்போர்ட் மண்டல அதிகாரியுடன் இணைந்து சிறப்பு கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் முன்னிலையில் இன்று (25.02.2022) காலை, சென்னை, சாலிகிராமத்திலுள்ள, பாஸ்போர்ட் சேவை மையத்தில், அகர்வால் கண்மருத்துவமனை சார்பில் சிறப்பு கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது அகர்வால் கண்மருத்துவமனை மருத்துவர் கலாதேவி உடனிருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாஸ்போர்ட் சேவை மைய அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.