Take a fresh look at your lifestyle.

பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

mahila court conviction for rape case

67

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் -அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 25 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கத்தியைக்காட்டி மிரட்டி 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் (வயது 28) என்ற வாலிபரை கிண்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அல்லிக்குளம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கிண்டி அனைத்து மகளிர் காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரி அறிவழகன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 -அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.