Take a fresh look at your lifestyle.

பாய்ஸ் கிளப் மாணவர்களுக்கு வாழ்வுசார் மேம்பாட்டு பயிற்சி மையம்: சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்

116

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர் சங்கர்ஜிவால்
அரும்பாக்கம்‌ காவல்‌ சிறார்‌ மன்றத்தில்‌ காவல்‌ சிறார்‌ மன்ற
மாணவ மாணவிகளுக்கான வாழ்வு சார்‌ மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும்
படே நிறுவனத்தினர்‌ வழங்கிய நவீன பேருந்தை சிறார்‌ மன்ற சிறுவர்‌
சிறுமியர்கள்‌ பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

சென்னை பெருநகர காவல்‌ துறையில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌
உத்தரவின்‌ பேரில்‌ புதிதாக சென்னை பெருநகர காவல்‌
துறையில்‌ 38 சிறுவர்‌ மற்றும்‌ சிறுமியர்‌ மன்றங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டு
மொத்தம்‌ 112 காவல்‌ சிறார்‌ மற்றும்‌ சிறுமியர்‌ மன்றங்கள்‌ செயல்பட்டு
வருகிறது.

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌ உத்தரவின்‌ பேரில்‌, மேற்கு மண்டல இணை ஆணையாளர்‌,
ராஜேஸ்வரி. சென்னை
காவலர்‌ சிறார்‌ மற்றும்‌ சிறுமியர்‌ மன்றங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கடந்த
03.08.2021 அன்று நியமிக்கப்பட்டார்‌.

சிறார்‌ மன்றங்கள்‌ சிறப்பாக செயல்பட
அதன்‌ உறுப்பினர் களுக்கு விளையாட்டு போட்டிகள்‌, மருத்துவ முகாம்கள்‌
மற்றும்‌ விளையாட்டு பொருட்கள்‌, எழுது பொருட்கள்‌ வழங்கியதுடன்‌
குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்‌, இளவயது திருமணம்‌ பற்றிய
விழிப்புணர்வை மாநில மனித உரிமைகள்‌ கழகம்‌ அப்பல்லோ
மருத்துவமனை, நலம்‌, பி வெல்‌ மருத்துவமனை மற்றும்‌ சர்வதேச நீதி பணி
முகமையுடன்‌ இணைந்து நடத்தப்பட்டது.

தற்போது 112
மன்றங்களில்‌ 3,626 சிறார்களும்‌ மற்றும்‌ 1.826 சிறுமியர்களும்‌ என மொத்தம்‌ 5452 பேர்‌ உறுப்பினர்களாக உள்ளனர்‌. கடந்த 2020-ம்‌ ஆண்டை
ஒப்பிடுகையில்‌ தற்போது 10 சதவீதம்‌ உறுப்பினர்கள்‌ அதிகமாக
சேர்ந்துள்ளனர்‌.

இதன்‌ தொடர்ச்சியாக அரும்பாக்கம்‌ காவல்‌ நிலைய சிறார்‌
மற்றும்‌ சிறுமியர்‌ மன்ற கட்டிடத்தின்‌ முதல்‌ மாடியில்‌ பெருநகர சென்னை
மாநகராட்சியின்‌ பங்களிப்பு (ரூ.13.5 இலட்சம்‌ ) மற்றும்‌ படே நிறுவன
பங்களிப்பு என மொத்தம்‌ ரூ.27 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ இக்கட்டிடம்‌
கட்டப்பட்டுள்ளது.

மேலும்‌ ரூ.23 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இக்கட்டிடத்திற்கு
தேவையான இதர அடிப்படை வசதிகளை சென்னை அரும்பாக்கத்தைச்‌
சேர்ந்த நல விரும்பிகள்‌ மூலம்‌ செலவிடப்பட்டு சமூகத்தில்‌ பின்தங்கிய
மாணவர்கள்‌ தங்களது உயர்‌ படிப்பை தொடரவும்‌, உயர்‌ தொழில்‌ நுட்ப
கல்லூரிகளில்‌ சேருவதற்கு 48 / பட்டா போன்ற நுழைவு தேர்வு எழத
பயிற்சியும்‌ மற்றும்‌ சீருடை பணியாளர்‌ jதேர்வு முகமை, (8௩6) தமிழ்நாடு
அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌, வங்கி தேர்வுகள்‌,

மத்திய பணியாளர்‌ தேர்வாணையம்‌, (50) ரயில்வே தேர்வாணையம்‌
நடத்தும்‌ போட்டி தேர்வுகளில்‌ கலந்து கொள்ள தேவையான
பயிற்சிகளை இம்மையம்‌ மூலம்‌ வழங்குகின்றனர்.

சன்‌ அகடாமி போன்ற
இதர பயிற்சி மையங்களிலிருந்தும்‌ சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு
மேலும்‌ சிறப்பாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காவல்‌ சிறார்‌ மற்றும்‌ சிறுமியர்கள்‌ பல்வேறு விளையாட்டு
போட்டிகளில்‌ கலந்து கொள்ளவும்‌, பல்வேறு கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌
வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்லவும்‌, படே நிறுவனம்‌ ரூ.60
லட்சம்‌ மதிப்புள்ள பேருந்து வழங்கியுள்ளது. இதில்‌ குளிர்சாதன வசதி,
தொலைக்காட்சி பெட்டி, முதலுதவி பெட்டி, கேமிரா, தண்ணீர்‌ சுத்திகரிப்பு
கருவி, மடிக்கணினி, அலைபேசி சார்ஜ்‌ செய்யும்‌ வசதி மற்றும்‌ அனைத்து
ஜன்னல்களிலும்‌ அவசர காலத்தில்‌ வெளியேறும்‌ வசதி போன்ற 17
வசதிகள்‌ செய்யப்பட்ட சிறப்புமிக்க இப்பேருந்து சென்னை பெருநகர காவல்‌
சிறார்‌ மற்றும்‌ சிறுமியர்‌ மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி
திட்டங்களுக்கு மொத்தம்‌ ரூ.1 கோடியே 10 லட்சம்‌ செலவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிகழ்வுகள்‌ இதுவரை சென்னை பெருநகர காவல்‌ துறை
வரலாற்றில்‌ இல்லாத ஓர்‌ சிறப்புமிக்க நிகழ்வாகும்‌.

இன்று (14.04.2022) காலை அரும்பாக்கம்‌ காவல்‌ சிறார்‌ மற்றும்‌
சிறுமியர்‌ மன்றத்தில்‌ நடந்த விழாவில்‌ சென்னை பெருநகர காவல்‌
ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌,
கலந்து கொண்டு
காவல்‌ சிறார்‌ மன்ற மாணவ மாணவிகளுக்கான வாழ்வு சார்‌ மேம்பாட்டு
பயிற்சி மையத்தை
திறந்து
வைத்தார்‌. மேலும்‌ சிறப்பு பேருந்தையும்‌ கொடியசைத்து துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ சென்னை பெருநகர காவல்‌ கூடுதல்‌ ஆணையாளர்‌
(தலைமையிடம்‌) லோகநாதன்‌, காவல்‌ இணை ஆணையாளர்‌,
(மேற்கு மண்டலம்‌), இராஜேஸ்வரி, படே நிறுவன துணை
தலைவர்‌ .பாலமுரளிதரன்‌, துணை ஆணையாளர்கள்‌. சிவபிரசாத்‌,
இ.கா.ப (அண்ணாநகர்‌) திரு.ஈஸ்வரன்‌, (புளியந்தோப்பு) மற்றும்‌ காவல்‌ சிறார்‌
மற்றும்‌ சிறுமியர்‌ மன்ற மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

மேலும்‌ மேற்படி பேருந்து மூலம்‌ இன்று (14.04.2022) 25 சிறுவர்‌
மற்றும்‌ சிறுமியர்‌ எழும்பூரில்‌ உள்ள மாநில காவல்‌ அருங்காட்சியகத்தை
பார்வையிட அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டூள்ளது.