Take a fresh look at your lifestyle.

பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்களுக்கான கண் பரிசோதனை முகாம்: இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி துவங்கி வைத்தார்

jcop rajeswari ips conducted free eye camp for police boys club

66

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், (GCP -Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டும் வருகிறது.

 

காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு 03.06.2022 மற்றும் 04.06.2022 ஆகிய 2 நாட்கள் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினரின் உதவியுடன் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்த காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் பாய்ஸ் கிளப் மன்றங்களை திறம்பட நடத்துவதற்கு மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாய்ஸ் கிளப் சிறுவர், சிறுமியர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை இணைக்கமிஷவர் ராஜேஸ்வரி செய்து வருகிறார். அதன்படி கடந்த மாதம் சிறுவர், சிறுமியர் மெட்ரோ ரெயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்த டான் சினிமாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாமை இன்று இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.

இந்த கண் பரிசோதனை மருத்துவ முகாமில் மேற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதனை தொடர்ந்து நாளை (04.06.022) நடைபெறும் கண் பரிசோதனை மருத்துவ முகாமில் சென்னை பெருநகர காவல் வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தை சேர்ந்த மேலும் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாக இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.