பாய்ஸ்கிளப் சிறார்களுக்கு கடலோர காவல்படை கப்பலை சுற்றிக் காட்டிய இணைக்கமிஷனர்
boys club childrends visit coastguard ship
போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி கடலோர காவல் படை கப்பலை நேரில் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார். இதனால் சிறார், சிறுமியர் நெகிழ்ந்து போயினர்.
சென்னை நகரில் போலீஸ் பாய்ஸ் கிளப் புத்துணர்வு பெற்று வருகிறது. கமிஷனர் சங்கர்ஜிவால் நேரடி மேற்பார்வையில் சென்னை நகரில் உள்ள போலீஸ் பாய்ஸ்கிளப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பாய்ஸ்கிளப் சிறார், சிறுமியர்கள் புத்துணர்வு பெறும் வகையில் அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டங்களை கமிஷனர் சங்கர்ஜிவால் செய்து வருகிறார். சென்னை நகரில் உள்ள பாய்ஸ் கிளப்பை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கு நோடல் அதிகாரியாக சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் பாய்ஸ் கிளப் சிறார் சிறுமியர்களை மெட்ரோ ரயிலில் அழைத்துச் சென்று அவர்களுடன் தானும் அமர்ந்து பயணம் செய்து இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி அது தொடர்பாக குழந்தைகளுக்கு பல்வேறு புதிய விஷயங்களை கற்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அடுத்த முயற்சியாக சென்னை பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்களுக்கு இந்திய கடலோர காவல் படைக்கப்பல் நேரில் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டப்பட்டது. இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி இதற்கான ஏற்பாடுகளை நேற்று செய்திருந்தார்.
இன்று சென்னை பாய்ஸ்கிளப்பைச் சேர்ந்த சிறார், சிறுமியர்கள் 100 குழந்தைகள் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஷவ்ரியா கப்பல் மிகப் பிரமாண்டமான கப்பலை இன்று நேரில் பார்வையிட்டனர். கடந்த 2017ம் ஆண்டு இந்திய கடலோர காவல்படை மத்திய அரசால் வழங்கப்பட்டது. கடலோர காவல் படையினர் ரோந்து செல்லும் வகையில் கப்பலில் அனைத்து வகையான பாதுகாப்புகளையும் உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் போது அவர்களை மீட்டு கொண்டு வரும் வகையில் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் சுங்கத்துறை மற்றும் காவல்துறையினர் கள்ளக்கடத்தல் தொடர்பான குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது இந்த கப்பல் பெரிதும் உதவிகரமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது போன்ற சுவாரஷ்யமான விஷயங்கள் பற்றி சிறார், சிறுமியர்களுக்கு கடலோர காவல்படை அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள்.
மேலும் கப்பலை சுற்றிப்பார்த்த சிறார்களுக்கு டீ, சிற்றுண்டி விருந்தும் கடலோர காவல்படையினரால் அளிக்கப்பட்டது. இந்திய கடலோர காவல் படை கப்பலில் இருந்த சிறப்பு அம்சங்களைக் கண்டு மகிழ்ந்து போன சிறார், சிறுமியர்களுக்கு கப்பல் படை அதிகாரிகள் பரிசுகள் மற்றும் பூங்கொடுத்து கொடுத்து அவர்களை மகிழ்வித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி பாய்ஸ் கிளம் சிறார், சிறுமிகளை இன்னும் ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது அறிவை வளர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.