Take a fresh look at your lifestyle.

பவானியில் காரை வழிமறித்து ஆந்திர வாலிபரிடம் ரூ. 2 கோடி கொள்ளை

38

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரை வழிமறித்து ஆந்திர வாலிபரிடம் ரூ. 2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விகாஷ். இவர் தனது காரில் ரூ. 2 கோடி பணத்துடன் கோவை நோக்கி புறப்பட்டார். இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் பைபாஸ் அருகே இன்று காலை வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அவ ரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென வழி மறித்து நின்றது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் விகாசை காரில் இருந்து கீழே இறக்கி விட்டுவிட்டு ரூ. 2 கோடி பணத்துடன் அந்த காரையும் அவர்கள் வந்த காரையும் எடுத்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விகாஷ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அது ஹவாலா பணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.