சென்னை, அண்ணாசாலை சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட் டினார்.
தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து காவலர்கள் அமைப்பினர், சென்னை பெருநகர காவல் துறையுடன் இணைந்து ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு ரோந்து கேடட் களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், வினாடி-வினா, மாதிரி தயாரித்தல் அணிவகுப்பு மற்றும் பயிற்சிப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். சென்னை, அண்ணாசாலை, சர்ச் பார்க், பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் 150 பள்ளி மாணவர்களுக்கிடையே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப்போட்டியில் 500 ஆர்எஸ்பி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சென்னைப் பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி. சரத்கர், இணைக் கமிஷனர் மயில்வாகணன், தலைமை போக்குவரத்து வார்டன் ஹரிஷ் எல்.மேத்தா, துணை தலைமை போக்குவரத்து வார்டன் அசீம் அகமது, புனித உருசுலா பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி புஷ்பா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.