பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கமிஷனர் சங்கர்ஜிவால்
COP shankar jiwal IPS Conducted drug awarenes
பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நடந்தது.
போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, சென்னை நகரில் காவல் அதிகாரிகள் தலைமையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜுன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கடந்த 24ம் தேதியன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை, கோடம்பாக்கம், பதிப்பக செம்மல் கே. கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் அன்பு பாலம் சார்பில் நடத்தப்பட்ட ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி கமிஷனர் சங்கர்ஜிவால் வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யாபாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.