பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு இலவச தலைக்கவசம்: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினர்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் போக்குவரத்து விழிப்புணர்வூட்டும் வகையில் சென்னையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்குஇலவச தலைக்கவசம் வழங்கினார்கள்.
சென்னையில் இன்று மாலை (04.03.2022) மாலை எழும்பூர், மாநில காவல்
அருங்காட்சியகத்தில் “Ride for Safety Program” நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 120 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்து இலவசமாக தலைக்கவசங்களை இருவரும் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து தயாரித்த Projects களை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் லோகநாதன், கபில் குமார் சி சரத்கர், இணை ஆணையாளர்கள் சாமூண்டிஸ்வரி, போக்குவரத்து துணை ஆணையாளர் (கிழக்கு) ஓம்பிரகாஷ் மீனா, காவல் அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.