Take a fresh look at your lifestyle.

பள்ளிக்கரணை காவல் துணை ஆணையரின் ‘மாண்டஸ்’ கவிதை

91

புயலும் மரமும்!

வேரோடு பெயர்ந்த மரங்கள்
சாலை நடுவில் வானம் பார்க்க கிடந்தன…

எறும்பு போல் சாரையாய் மனிதர்கள்
குவிந்து அதை சாலையோரம் கிடத்தினர்…

கடப்பாரை மண்வெட்டி இயந்திரங்கள் உடற்கூராய்வு செய்து
மரத்தை கட்டை என்று பெயர் மாற்றம் செய்தன…

வைரம் பாய்ந்த கட்டைகள் லாரிகளில் இடப்பெயர்ச்சி செய்ய
மரம் இருந்த தடம் அழிந்தது அந்த புயல் நாளில்…

மீண்டும் செடி நடப்பட்டது அதே இடத்தில் ஒரு மழை நாளில்..

உயிர்த்தலும், வாழ்தலும்

பின் மரித்தலும் தானே உலக நியதி…

மரம் பெயர்த்த புயலுக்கு தான் அற்ப ஆயுசு ஓரிரு நாட்கள்…

மரம் ஒரு அறம் என்றது அதன் வாழ்க்கை குறிப்பு…

 

கு. ஜோஷ் தங்கையா, துணை ஆணையர்,

பள்ளிக்கரணை காவல் மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரகம்.