Take a fresh look at your lifestyle.

பள்ளிக்கரணையில் மீட்கப்பட்ட 70 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

100

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தில், பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 70 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல் போன்கள் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் சைபர்கிரைம் காவல்துறை மூலம் மீட்டுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிக்கரணை காவல் மாவட்டத் துக்குட் பட்ட பகுதிகளில் 136 செல்போன்கள் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டன. பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் சைபர்கிரைம் போலீசார் அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

காணாமல் போன செல் போன் களின் ஐஎம்இஐ உதவியுடன் டவர் பரிசோதனை செய்து அவற்றில் 70 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்ப டைக்கும் நிகழ்வு நேற்று பள்ளிக் கரணை துணைக்கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. துணைக்கமிஷனர் ஜோஷ் தங் கையா அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார். காணாமல் போன செல்போன்களை மீட்கும்படி தொடரும் என்றும் துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா தெரிவித்தார்.