Take a fresh look at your lifestyle.

பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்த அரசு பஸ்: 14 பேர் காயம்

76

திண்டுக்கல்லில் இருந்து நேற்று காலையில் அரசு பஸ் ஒன்று 18 பயணிகளுடன் சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜய குமார் (40) என்பவர் ஓட்டி சென்றார். திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் சிறுமலை பகுதி முழுவதும் கடும் பனி மூட்டம் நில வியது. 18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது  சாலை யின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்ற போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 2 ஆம்புன்ஸ்களில் காயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை தென்மலையை சேர்ந்த பழனியம்மாள் (65), பாஸ்கரன் (62), கார்த்திக் (26), கணேசன் (67), ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த கோபால் (40) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர் சங்கீதா வெள்ளி மலை கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.