கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திரா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிப்பள்ளியை சேர்ந்த 8 வயது சிறுவன் உதய் கிரண். அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். கடந்த 12-ந் தேதி அங்குள்ள மரத்தில் மர்மமான முறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தான். கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை பரிசோதனை செய்த போது சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிறுவனின் உறவினர்களான சகாதேவன், ராஜேஸ்வரி ஆகியோர் சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது. உறவினர்களான இருவரும் கள்ளக்காதலர்களாக பழகி வந்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று இருவரும் வீட்டில் உள்ள அறையில் உல்லாசமாக இருந்தனர். இதனை சிறுவன் உதய்கிரண் நேரில் பார்த்து உள்ளான். அவன் யாரிடமாவது சொல்லி விட்டால் பிரச்சினை வந்து விடும் என்பதால் சிறுவன் உதய்கிரனை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் தொங்க விட்டுள்ளனர் போன்ற அதிர்ச்சித் தகவல்கள் விசாரணையில் தெரியவந்தன. அதையடுத்து போலீசார் சகாதேவன், ராஜேஸ்வரியை கைது செய்தனர்.