பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டியில் தமிழக கமாண்டோப் பிரிவு 2வது இடம்: * டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
தேசிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போட்டியில் தமிழக கமாண்டோப் பிரிவு 2வது இடத்தைப் பிடித்தமைக்காக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பாராட்டு பெற்றனர்.
2022ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி- தேசிய பாதுகாப்பு படையினரால் ஹரியானாவில் உள்ள மானேசர் என்எஸ்ஜி முகாமில் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாநில அளவில் ஹரியானா, ஜார்கண்ட், மேகாலாயா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு கமாண்டோப் படை உள்ளிட்டவை பங்கு பெற்றன.
இந்தக் கூட்டுப் பயிற்சி மற்றும் போட்டியின் போது என்எஸ்ஜி பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை அதிநவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு பயங்கரவாதி களின் சதியை எவ்வாறு முறியடிப்பது பற்றியும், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தும் போது எப்படி மீட்பது ஹெலிகாப்டரி லிருந்து கயிறு மூலம் மீட்து போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. இந்தப் பயிற்சிகளில் திறம்பட பயிற்சி பெற்று சிறந்து விளங்கிய அணியை தேர்வு செய்தனர். இதில் தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 18 கமாண்டோக்கள் கொண்ட துணை தளவாய் க. வேலு தலைமையிலான அணி 2வது இடத்தைப் பெற்றது. மேலும் இந்தப் போட்டியில் சிஐஎஸ்எப் முதல் இடத்தையும், உத்தரகாண்ட் 3வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற தமிழக கமாண்டோ அணியை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.