Take a fresh look at your lifestyle.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற துணைக்கமிஷனர், எஸ்ஐ.,க்கு ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

115

ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற துணைக் கமிஷனர் மற்றும் எஸ்.ஐ., ஆகியோரை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்துப் பிரிவு துணைக்கமிஷனராக பணிபுரிந்து வருபவர் எம்.எம். அசோக்குமார். இவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் திரு முல்லைவாயல் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத்குமாரும் நேற்று பணி நிறைவு பெற்றார். இவர்கள் இருவருக்குமான பணி நிறைவு வழியனுப்பு விழா நேற்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.  ஆவடி காவல் ஆணையரகம் துவங்கிய நாள் முதல் போக்குவரத்து பிரிவில் துணைக்கமிஷனர் அசோக்குமார் திறம்பட செயல்பட்டு போக்குவரத்து இடையூறு இல்லாமல் செயல் பட்டத ற்காக அவருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ் வழங்கினார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் சம்பத்குமாரும் கமிஷனரிடம் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணைக்கமிஷனர் மகேஷ், ரெட் ஹில்ஸ் துணைக்கமிஷனர் மணிவண்ணன், மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் பெருமாள் மற்றும் தலைமையிட துணைக்கமிஷனர் உமையாள் உள்ளிட்ட அதிகாரிகள், குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.