Take a fresh look at your lifestyle.

பட்டாக்கத்திகளுடன் கோவளம் செக்போஸ்ட்டில் சிக்கிய ரவுடிகள்

75

சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பீர்க்கங்காரனை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் ஏ கேட்டகிரி ரவுடி விவேக் என்கிற ராஜராஜ் (வயது 28) மற்றும் விஷால் (வயது 28).

இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் துணைக்கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று நடத்திய வாகன சோதனையில் கோவளம் செக்போஸ்ட் அருகே இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று பட்டாகத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.